இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அனில் அனந்தசாமிக்கு இயற்பியலுக்கான பிரிட்டிஷ் இதழியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்: லண்டனில் பிரபலமான நியூ சயின்ட்டிஸ்ட் மேகஸின் என்ற அறிவியல் இதழின் ஆலோசகர் அனில் அனந்தசாமி. இவர் எழுதிய "தி எட்ஜ் ஆஃப் ஃபிஸிக்ஸ்' என்ற புத்தகத்துக்கு அறிவியல் மற்றும் தொழில் மேம்பாட்டு மையம் சார்பாக பிரிட்டிஷ் இயற்பியல் இதழியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த மையம், இயற்பியல் துறையில் சிக்கலான விஷயங்கள் மற்றும் நுணுக்கமான அறிவியல் சூத்திரங்களுக்கு எளிமையான தீர்வுகளைக் கண்டுபிடித்து இளைய தலைமுறையினரின் ஆராய்ச்சிக்கு உதவும் பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருதை வழங்க முடிவு செய்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு முதலாவது பிரிட்டிஷ் இயற்பியல் இதழியல் விருதைப் பெற்றுள்ளார் அனில் அனந்தசாமி. சர்வதேச அளவில் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை வடிவமைத்து கட்டமைக்கும் திட்டத்துக்கு அனந்தசாமியின் இந்த வானியல் ஆராய்ச்சிக் கட்டுரை பெரிதும் பயனளிக்கும் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுபவருக்கு ஜப்பானில் நடைபெறும் சர்வதேச இயற்பியல் ஆராய்ச்சி கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
விருது குறித்து அனந்தசாமி கூறியது: இயற்பியலைப் பற்றி எழுதுவதும் ஆராய்ச்சி செய்வதும் எனக்கு மிகவும் பிடித்தவை. நான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு பணிக்கு விருது கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

